நடிகர் அஜித் குமாரின் 64-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா, ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்கிற பெயரில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும், நடிகர் அஜித் குமாரும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காரணம், அஜித்துக்கு சம்பளம் கொடுத்து படப்பிடிப்பு பட்ஜெட்டையும் ஒதுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகிறதாம். இதனால், அஜித் தயாரிப்பில் இறங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஏகே - 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பை இந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Reports indicate that an announcement regarding actor Ajith Kumar's 64th film will be made soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகன், மகளுடன் நடிகர் அஜித் குமார்!
டாக்ஸிக் படம் வெளியாவதில் சிக்கல்?
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

கிரிக்கெட் விளையாடிய அஜித்... விடியோ வைரல்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





