இறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வுசிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியாது: மிஷ்கின்

நடிகர் விஜய் சேதுபதி குறித்து மிஷ்கின் பேசியது...

vijay sethupathi and mysskin

விஜய் சேதுபதி, மிஷ்கின்

Updated On :

இயக்குநர் மிஷ்கின் நடிகர் விஜய் சேதுபதியை டிரெயின் திரைப்படத்திற்காக பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான டிரெயின் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். முழுக்கதையும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இதன் டீசர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “நடிகர் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாராலும் இப்படத்தைச் செய்திருக்க முடியாது. நடிகர்கள் கமல் ஹாசன், ஆமிர் கானால் கூட நடித்திருக்க முடியாது. காரணம், இது விஜய் சேதுபதிக்காகவே எழுதப்பட்டது. ஒரு எரிமலை மாதிரி மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். என் திரைப்படத்தைப் புகழ்ந்து பேசுவதற்காகச் சொல்லவில்லை. படம் நன்றாக இருந்தால் மட்டும்தான் ஓடும். என்னால் விஜய் சேதுபதியிடம் பாணியாற்ற முடிந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Director Mysskin has praised actor Vijay Sethupathi for the movie Train.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.