புதுதில்லி: ஜூலை மாதம், தலைநகர் தில்லியில் மின்சார வாகனப் பதிவானது 10,719 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இம்மாதத்தில் அறிவிக்கப்பட்ட புதிய 'மின்சார வாகனம் - கொள்கை 2.0' இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மத்திய அரசின் 'வாகன்' என்ற இணையதளத் தரவுகளின் அடிப்படையில், மின்சார வாகனம் பிரிவில், ஜூலை மாதம் 10,719 வாகனங்கள் பதிவானது. இதுவே கடந்த மாதமான ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 9,296 வாகனங்களை விட 1,423 வாகனங்கள் அதிகம். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 6,414 மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது.
மாசு இல்லாத போக்குவரத்து முறையை வழங்கும் நோக்கத்துடன், தில்லி அரசு ஜூலை 01 முதல் புதிய மின்சார வாகனக் கொள்கை 2026 ஐ அறிவித்தது. இதில் பல்வேறு சலுகைகள், சார்ஜிங் மற்றும் வரி விலக்குகள் மற்றும் பேட்டரி - மாற்று உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை வழங்கியுள்ளது.
'வாகன்' இணையதளத் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டின் கடந்த ஏழு மாதங்களில் மின்சார வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் மிக அதிகமாக இருந்தது. ஜனவரியில் 6,077 வாகனங்கள், பிப்ரவரியில் 4,983 வாகனங்கள், மார்ச் மாதத்தில் 7,324 வாகனங்கள், ஏப்ரல் மாதத்தில் 7,658 வாகனங்கள், மே மாதத்தில் 8,738 வாகனங்களும், ஜூன் மாதத்தில் 9,296 வாகனங்களும், ஜூலை மாதத்தில் 10,719 வாகனங்களும் பதிவானது.
மின்சார வாகனக் கொள்கையின் கீழ், தலைநகரில் பதிவு செய்யப்படும் ரூ. 30 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட அனைத்து மின்சார கார்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் முழு விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. 2027 ஜனவரி 01 முதல் தில்லியில் மின்சார ஆட்டோ மட்டுமே பதிவு செய்யப்படும். அதே வேளையில், புதிய பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இருசக்கர வாகனங்கள் பதிவு படிப்படியாக நிறுத்தப்பட்டு, 2028 ஏப்ரல் 01 முதல் மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
இந்தப் புதிய கொள்கையின் அடிப்படையில், மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு முதல் ஆண்டில் ரூ. 30,000, இரண்டாம் ஆண்டில் ரூ. 20,000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ. 10,000 மானியம் வழங்கப்படும்.
மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கவும் மாநில அரசு அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ. 15,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
மேலும், தலைநகர் தில்லி முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்படும்.
Summary
Electric vehicle registrations in Delhi hit a 2026-high of 10,719 units in July.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா

ஜென் ஸீ, ஜென் ஆல்ஃபா தலைமுறையினருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் கலந்துரையாடல்!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




