FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. குறித்து...

News image

யஷவந்தராயகௌடா பாட்டீல் - படம் - எக்ஸ்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 8:45 pm IST

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அமைச்சர் பதவி வழங்கப்படாததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யஷவந்தராயகௌடா பாட்டீல் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

கர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்து வந்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 3 ஆம் தேதி டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், முதல்வர் உள்பட 14 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். இதனால், பல்வேறு முக்கியத் துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, பெங்களூரில் உள்ள லோக் பவனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் 20 புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. யஷவந்தராயகௌடா பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் சமர்ப்பித்தார்.

இதனிடையே நடைபெற்று முடிந்த பதவியேற்பு விழாவின் மூலம் முதல்வர் உள்பட 34 அமைச்சர்களுடன் அமைச்சரவை முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Congress MLA Yashvantharaya Gowda Patil resigned from his post today after not being allotted a ministerial berth during the Karnataka cabinet expansion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.