மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கர்நாடக காங்கிரஸ் அரசு மௌனம் காப்பதாக மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு கேள்வியெழுப்பியுள்ள மாநில பாஜக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "தேர்தலுக்கு முன்பு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக நடைப்பயணம் மேற்கொண்டீர்கள். ஆனால், இப்போது ஏன் மௌனம் காத்து சரணடைந்து விட்டீர்கள். இதன் காரணம் என்ன?
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒரு செங்கலைக்கூட அனுமதிக்க மாட்டோம் என உங்கள் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் (மாணிக்கம் தாகூர்), கர்நாடகத்துக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.
உங்களுக்கு தைரியம் இருந்தால், கன்னடர்கள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இப்போது சென்னைக்கு ஒரு நடைப்பயணம் செல்லுங்கள். தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு முன்னால் அமர்ந்து, உண்ணாவிரதம் இருந்து, உங்கள் அரசியல் உறுதிப்பாட்டை நிரூபிக்கவும்.
இல்லை, வெறும் வாக்குகளுக்காக நடைப்பயணம் என்ற நாடகத்தை நடத்திவிட்டு, தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலுக்கு பயந்து மறைந்து விட்டீர்களா நீங்கள்?
காவிரி நீர் கிடைக்காத நம் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் பெங்களூரில் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவைகளைவிட தில்லியில் இருந்து வரும் கட்டளைகளும் தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலும்தான் உங்களுக்கு முக்கியமா?
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்த துளியும் விருப்பமில்லை. மேக்கேதாட்டு பெயரை வெறும் தேர்தல் சூழ்ச்சியாகப் பயன்படுத்தும் இவர்கள், தமிழ்நாடு காங்கிரஸின் கருத்துக்கு குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக்கூட பயப்படுகின்றனர்.
கன்னடர்களின் நம்பிக்கைக்கு எதிராக நீங்கள் செய்யும் துரோகத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Karnataka LoP R Asoka questions CM Shivakumar's silence over TN Congress warning against Mekedatu project
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்
இழுபறியில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! தில்லி சென்றார் முதல்வர் சிவகுமார்!

கர்நாடக அமைச்சரவை எப்போது விரிவாக்கம்? உறுப்பினர்கள் இடையே மீண்டும் போட்டி!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


