உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

இந்த வீரர் உலகக் கோப்பையைப் பெற்றுத் தருவார்: ரிக்கி பாண்டிங்

மிக மிக ஆபத்தான டி 20 வீரர். உலகக் கோப்பைப் போட்டிக்கு...

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:18 pm IST

ஆஸி. வீரர் டிம் டேவிட்டால் உலகக் கோப்பையைப் பெற்றுத் தர முடியும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

26 வயது டிம் டேவிட், ஆஸ்திரேலிய அணிக்காக 14 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 158.52. ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 8.25 கோடிக்கு டிம் டேவிட்டைத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் 2022 போட்டியில் 8 ஆட்டங்களில் 186 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 216.28.

இந்நிலையில் டிம் டேவிட் பற்றி ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

Story image

நான் மட்டும் ஆஸி. அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தால், டிம் டேவிட் போன்ற ஒரு வீரரை அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவேன். அவர் விளையாடுகிறாரோ இல்லையோ, அவரைப் போன்ற அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் அணியில் இருக்கவேண்டும். அவரால் ஆட்டங்களில் வெற்றியை அளிக்க முடியும். அவரைப் போன்ற ஒரு வீரரால் உலகக் கோப்பையை வென்று தர முடியும். அணிக்குள் நுழைந்துவிடுகிற சாதாரண வீரர் அல்ல அவர். 2003 உலகக் கோப்பையில் விளையாடிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸை நினைவூட்டுகிறார். அவரைப் போன்ற வீரர்களை அணியில் சேர்த்து வாய்ப்பளித்தால் போட்டியை வென்று தருவார்கள். அப்படித்தான் டிம் டேவிட்டைப் பார்க்கிறேன். 

ஆஸி. அணியில் மிகச்சிறந்த நடுவரிசை வீரர்கள் உள்ளார்கள். ஆனால் கடந்த இரு வருடங்களில் டிம் டேவிட்டைப் போன்ற ஒரு வீரர் உருவாகவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் விளையாடிய எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் நிறைய ஆட்டங்களில் விளையாடவில்லை. மிக மிக ஆபத்தான டி 20 வீரர். உலகக் கோப்பைப் போட்டிக்கு டிம் டேவிட்டைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் தீவிரமாக யோசிப்பார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.