புகார் எதிரொலி: குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவுக்குப் பயிற்சியளிக்க அனுமதி

லவ்லினாவின் புகாரையடுத்து அவருடைய பயிற்சியாளர் சந்தியா, காமன்வெல்த் போட்டிகளில்...
புகார் எதிரொலி: குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவுக்குப் பயிற்சியளிக்க அனுமதி

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவுக்குப் பயிற்சியளிக்க அவருடைய பயிற்சியாளர் சந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்தார். 

2022 பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா நேற்று புகார் தெரிவித்தார். ஒலிம்பிக்ஸில் நான் பதக்கம் வெல்ல உதவிய என்னுடைய பயிற்சியாளர்கள் ஒவ்வொருமுறையும் வெளியேற்றப்படுகிறார்கள். ஆயிரம் முறை கோரிக்கைகள் விடுத்த பிறகும் அவர்கள் தாமதமாகவே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இது என்னுடைய பயிற்சியைப் பாதிக்கிறது. இதனால் நான் மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறேன். காமன்வெல்த் கிராமத்திலிருந்து என்னுடைய பயிற்சியாளர் சந்தியா வெளியேற்றப்பட்டு விட்டார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் என்னுடைய பயிற்சி, போட்டி தொடங்கும் 8 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்த பின்பும் என்னுடைய இன்னொரு பயிற்சியாளர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். என்னால் எப்படி விளையாட்டில் கவனம் செலுத்த முடியும் எனத் தெரியவில்லை. கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது இதுபோன்ற நிலை என்னுடைய ஆட்டத்திறனைப் பாதித்தது. இந்தமுறையும் இந்த அரசியலால் காமன்வெல்த் கேம்ஸில் பங்கேற்கும் நான் பாதிக்கப்படக்கூடாது. இந்த அரசியலைத் தகர்த்து இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்வேன் என நம்புகிறேன் என்று ட்விட்டரில் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் லவ்லினாவுக்குப் பயிற்சியளிக்க அவருடைய பயிற்சியாளர் சந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com