இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 300 ரன்கள் முன்னிலை

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 300 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
கருணாரத்னே (கோப்புப் படம்)
கருணாரத்னே (கோப்புப் படம்)

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 300 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

2-வது டெஸ்ட், காலேவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 378 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமல் 80 ரன்கள் எடுத்தார். 2-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, 69.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 88.1 ஓவர்களில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சல்மான் 62 ரன்கள் எடுத்தார். ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 323 ரன்களுடன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. மேத்யூஸ் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கருணாரத்னே 27, தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கை அணி 375 ரன்கள் முன்னிலை பெற்றால் இந்த டெஸ்டின் முடிவு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com