
குறைந்த வயதில் சர்வதேச டி20 சதம் அடித்து சாதனை படைத்துள்ள்ளார் பிரான்ஸ் அணி வீரர் கஸ்டவ் மெக்கியான்.
ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா, 2019-ல் 20 வயதில் (20வருடங்கள் 337 நாள்களில்) அயர்லாந்துக்கு எதிராக 62 பந்துகளில் 162 ரன்கள் அடித்ததே குறைந்த வயதில் அடித்த சர்வதேச சதமாக இருந்தது. தற்போது இச்சாதனையை முறியடித்துள்ளார் பிரான்ஸ் வீரர்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக 18 வயதில் (18 வருடங்கள், 280 நாள்கள்) சர்வதேச சதம் அடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரான்ஸ் அணியின் தொடக்க வீரர் கஸ்டவ் மெக்கியான். 61 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். எனினும் இந்த ஆட்டத்தில் கடைசிப் பந்தில் பிரான்ஸ் அணி தோற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.