ஒலிம்பியாட் நிறைவு விழா இதைவிட சிறப்பாக இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்

நிறைவு விழா இதைவிடப் பெரிதாகவும் சிறப்பாகவும் இருக்கும். வீரர்களுக்கு வாழ்த்துகள்...
ஒலிம்பியாட் நிறைவு விழா இதைவிட சிறப்பாக இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

முன்னதாக, நாட்டின் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் இந்திய கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி, தமிழக செஸ் வீரா்கள் பிரக்ஞானந்தா, விஜயலட்சுமி, குகேஷ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

தொடக்க விழாவுக்கு ரசிகர்கள் பலத்த பாராட்டு தெரிவித்துள்ளார்கள். தொடக்க விழா நிகழ்ச்சிகளை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வடிவமைக்க விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தொடக்க விழா பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

தொடக்க விழாவின் பின்னணியில் உழைத்த கிரியேட்டிவ் குழுவினருக்கு நன்றி (முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான், விக்னேஷ் சிவன், நடிகை அதிதி ஷங்கர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.) நிறைவு விழா இதைவிடப் பெரிதாகவும் சிறப்பாகவும் இருக்கும். வீரர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

இதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் விக்கேஷ் சிவன் கூறியதாவது:

இந்த வாய்ப்புக்கும் முதல் நாளில் இருந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையவேண்டும் என்பதற்கான உங்களுடைய ஆர்வமும் முயற்சிகளும் தான் இந்த வெற்றிக்குக் காரணம். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. ஆதரவளித்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.  

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, ஆகஸ்ட் 9 அன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com