காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இந்தியா டி20 தொடர்: மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு

உடற்தகுதியை நிரூபித்த ஹெட்மையர், அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மே.இ. தீவுகள் அணி

Published On :

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதியை நிரூபித்த ஹெட்மையர், அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடினார். எவின் லூயிஸ் அணியில் இடம்பெறவில்லை. சொந்தக் காரணங்களுக்காக ஃபேபியன் ஆலனும் காயம் காரணமாக ஷெல்டன் காட்ரெல்லும் அணியில் இடம்பெறவில்லை. 

மே.இ. தீவுகள் அணி

நிலோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), கைல் மேயர்ஸ், புரூக்ஸ், ஹெட்மையர், டெவன் தாமஸ், ஓடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால்,  டொமினிக் டிரேக்ஸ், அல்ஸாரி ஜோசப், ஒபட் மெகாய், அகேல் ஹுசைன், ஹேடன் வால்ஸ் ஜூனியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.