அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத், ஷெஃபாலி: தடுமாறும் ஆஸி. மகளிர் அணி

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம்...
அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத், ஷெஃபாலி: தடுமாறும் ஆஸி. மகளிர் அணி

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

பிர்மிங்கம் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 33 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணியின் ஜெஸ் ஜொனாசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2018 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20யில் முதல்முறையாக 50+ ரன்கள் எடுத்துள்ளார் ஹர்மன்ப்ரீத் கெளர். 

ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்களில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 26 வயது ரேணுகா சிங் தாக்குர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com