பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காமன்வெல்த் போட்டிகள்: பயிற்சியாளர் உதவியுடன் போட்டிக்குத் தயாராகும் லவ்லினா

ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற லவ்லினா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லவேண்டும் என்பதே...

News image
Updated On :29 ஜூலை 2022, 4:54 pm IST


டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்தார். 

2022 பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக லவ்லினா புகார் தெரிவித்தார்.  காமன்வெல்த் கிராமத்திலிருந்து என்னுடைய பயிற்சியாளர் சந்தியா வெளியேற்றப்பட்டு விட்டார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் என்னுடைய பயிற்சி, போட்டி தொடங்கும் 8 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து காமன்வெல்த் போட்டிகளில் லவ்லினாவுக்குப் பயிற்சியளிக்க அவருடைய பயிற்சியாளர் சந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தற்போது தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் லவ்லினா.

நாளை (ஜூலை 29) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் அரியன் நிகோல்ஸனை எதிர்கொள்கிறார் லவ்லினா. காலிறுதிச்சுற்றில் வேல்ஸின் ரோசியுடன் மோதுகிறார். அனுபவம்மிக்க ரோசியை வீழ்த்திவிட்டால் அரையிறுதிக்குத் தகுதியடைந்து பதக்கத்தை உறுதி செய்வார் லவ்லினா . 

எனினும் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற லவ்லினா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லவேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

Related Article

இந்திய அணி மோசமாக விளையாடுகிறதா? ரோகித் சர்மா பதில்

இந்திய கிரிக்கெட் அணி 1998 காமன்வெல்த் போட்டிகளில் விளையாடியபோது...

ஆஸி. அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து விலகிய தமிழக வீரர்

ஒலிம்பியாட் நிறைவு விழா இதைவிட சிறப்பாக இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்

காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழா: படங்கள்

இந்தியா டி20 தொடர்: மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.