ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் விலகியுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக ஆஸி. அணியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார் தமிழக முன்னாள் வீரர் எஸ். ஸ்ரீராம். இந்திய அணிக்காக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தற்போது ஆஸி. அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் வெட்டோரி தேர்வாகியுள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஆஸி. அணியிலிருந்து ஸ்ரீராம் விலகியுள்ளார். ஐபிஎல் போட்டியின் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவில் ஸ்ரீராம் உள்ளார்.
ஆஸி. அணியில் ஸ்ரீராம் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஆடம் ஸாம்பா, அஷ்டன் அகர் ஆகியோர் திறமையான சுழற்பந்துவீச்சாளர்களாகப் புகழ் பெற்றார்கள். மேக்ஸ்வெல், டி20 ஆட்டங்களில் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதிலும் ஸ்ரீராமின் பங்களிப்பு உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

27.5.1976: ஜூன் முதல் சென்னை பள்ளிகள் காலை 8-30, 9 மணிக்கு துவங்கும்

‘கேட்’ மதிப்பெண் அடிப்படையில் தொழில்நுட்ப அலுவலா் பணி: ஐஏஎஃப் அறிமுகம்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

மதுரை அருகே மின்னல் பாய்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



