காமன்வெல்த்: இந்தியா இன்று விளையாடும் ஆட்டங்கள் எவை?
By DIN | Published On : 31st July 2022 01:12 PM | Last Updated : 01st August 2022 11:42 AM | அ+அ அ- |

காமன்வெல்த் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர். அவர்கள் இன்று எந்தெந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பா்மிங்ஹாம் நகரில் கடந்த 28ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 72 நாடுகளைச் சோ்ந்த 5000-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனா். இந்தியா தரப்பில் 215 போ் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நீச்சல் போட்டி:
ஆண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் சஜன் பிரகாஷ் பங்கேற்கிறார். மாலை 3.07 மணிக்கு நடைபெறுகிறது.
ஆண்களுக்கான 50 மீட்டர் பிரிவில் ஸ்ரீஹரி நட்ராஜ் பங்கேற்கிறார். மாலை 3.31 மணிக்கு நடைபெறுகிறது.
மகளிர் கிரிக்கெட்:
டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு மோதுகிறது.
ஜிம்னாஸ்டிக்:
ஆண்களுக்கான பிரிவில் யோகேஸ்வர் சிங் பங்கேற்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
குத்துச்சண்டை:
50 கிலோ எடைப்பிரிவில் நிகைத் ஜரீன் விளையாடுகிறார். மாலை 4.45 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
60 கிலோ எடைப்பிரிவில் ஷிவா தாபா விளையாடுகிறார். மாலை 5.15 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
75 கிலோ எடைப்பிரிவில் சுமித், சாகர் ஆகியோர் விளையாடுகின்றனர்.
ஹாக்கி (ஆண்கள்);
ஹாக்கி ஆண்கள் பிரிவு ஆட்டம் இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
பளுதூக்குதல்:
67 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரினுங்கா விளையாடுகிறார். மாலை 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
59 கிலோ எடைப்பிரிவில் பாப்பி ஹசாரிகா விளையாடுகிறார். மாலை 6.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
73 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் அசிந்தா ஷுலி விளையாடுகிறார். இரவு 11 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
டேபிள் டென்னிஸ்:
ஆடவர் அணியின் காலிறுதியாட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
இதேபோன்று பெண்களுக்கான அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது.