காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்கம்
By DIN | Published On : 31st July 2022 04:01 PM | Last Updated : 31st July 2022 06:54 PM | அ+அ அ- |

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இன்று (ஜூலை 31) 2வது தங்கம் கிடைத்துள்ளது.
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்று அசத்தினார்.
லால்ரினுங்கா ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்தார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.