செய்திகள்
பளு தூக்குதலில் தங்கம் வென்ற ஜெரிமிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற லால்ரினுங்கா ஜெரிமிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற லால்ரினுங்கா ஜெரிமிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்று அசத்தினார்.
லால்ரினுங்கா ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்தார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், ஜெரிமிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ட்விட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் அவர், தன்னம்பிக்கையுடன் புதிய வரலாறு படைத்த ஜெரிமிக்கு எனது பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.