ஹார்திக் பாண்டியாவை இளைய தோனி என்பேன் : சாய் கிஷோர்
By DIN | Published On : 03rd June 2022 04:54 PM | Last Updated : 03rd June 2022 04:54 PM | அ+அ அ- |

படம்: டிவிட்டர், ஹார்திக் பாண்டியா | தோனியுடன் பாண்டியா
தனது முதல் அறிமுகத் தொடரிலே ஐபிஎல் கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஆரம்பத்தில் குஜராத் அணியை யாருமே பெரிதாக மதிப்பிடவில்லை. ஏனெனில் அதிகமான இளம் வீரர்களும் ஒருசில அனுபவம் வாய்ந்த வீரர்களும் மட்டுமே இருந்தனர். மேலும், கேப்டன்சி அனுபவமில்லாத ஹார்தி பாண்டியாவை கேப்டனாக தேர்வு செய்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. ஆனால் பாண்டியாவின் சிறப்பான அணுகுமுறையால் குஜராத் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை ஸ்பின்னர் ஆர். சாய் கிஷோர், “நான் ஹார்திக் பாண்டியாவை தோனியின் இளைய வெர்ஷன் என்று சொல்லுவேன். இந்த வருடம் மிகச்சிறப்பானது, ஆனால் இன்னும் என்னால் சிறப்பாக விளையாட முடியுமென தோன்றுகிறது. வரும் காலங்களில் என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றமிருக்கும். வலைப்பயிற்சியில் தோனிக்கு பந்து வீசும்போது அவரிடம் ஆட்டத்தைக் குறித்துப் பேசியது உலகத்திலேயே மிகச்சிறந்தது என்பேன். ஆட்டத்தை கணிக்கும் எனது திறன் மிகுந்துள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிக்க: தோனியின் வெற்றி ரகசியம் : பத்ரிநாத்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...