

90களில் பிறந்த வீரர்களில் 10,000 டெஸ்ட் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட்.
லார்ட்ஸில் நடைபெற்ற உலக சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. 277 ரன்கள் என்கிற இலக்கை 78.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி. ஜோ ரூட், 170 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை அவர் பூர்த்தி செய்துள்ளார். இதுவரை விளையாடிய 118 டெஸ்டுகளில் 26 சதங்களுடன் 10,015 ரன்கள் எடுத்துள்ளார்.
90களில் பிறந்த கிரிக்கெட் வீரர்களில் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற புதிய சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். 31 வயது ரூட், 2012 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த 14-வது வீரர். கடைசி 21 டெஸ்டுகளில் 9 சதங்களை எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.