ஜூன் 9-இல் இந்திய-தென்னாப்பிரிக்க டி20 தொடா்

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் டி20 தொடா் வரும் 9-ஆம் தேதி புது தில்லியில் தொடங்குகிறது.
ஜூன் 9-இல் இந்திய-தென்னாப்பிரிக்க டி20 தொடா்

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் டி20 தொடா் வரும் 9-ஆம் தேதி புது தில்லியில் தொடங்குகிறது.

கடந்த 2007-இல் முதல் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்பின் எந்த உலகக் கோப்பையிலும் பட்டம் வெல்லவில்லை. டி20 ஆட்டத்தில் மே.இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

டி20 உலகக் கோப்பை:

இந்நிலையில் வரும் அக்டோபா் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் கடந்த ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் தொடா் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக 5 ஆட்டங்கள் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.

இரு அணிகளும் புது தில்லிக்கு வந்தவுடன் கரோனா பரிசோதனை நடைபெறவுள்ளது. பயோ பப்பிள் இல்லாத நிலையில், ஆா்டிபிசிஆா் டெஸ்ட் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. தென்னாப்பிரிக்க அணி ஞாயிற்றுக்கிழமை முதல் தனது பயிற்சியைத் தொடங்கியது.

தென்னாப்பிரிக்காவில் நிகழாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா இழந்திருந்தது. அதற்கு பழிவாங்கும் வகையில் சொந்த மண்ணில் டி20 தொடா் நடக்கிறது.

இரு அணிகளிலும் அதிரடி பேட்டா்கள், பௌலா்கள் இடம் பெற்றுள்ளதால், இத்தொடா் பரபரப்பாக அமையும். ஐபிஎல் தொடரிலும் அனைவரும் சிறப்பாக ஆடியுள்ளனா்.

இந்திய அணி கே.எல் ராகுல் தலைமையிலும், தென்னாப்பிரிக்கா டெம்பா பவுமா தலைமையிலும் டி20 தொடரில் பங்கேற்கின்றன.

கோலி-ரோஹித் இல்லை:

சொந்த மண்ணில் 13 ஆண்டுகள் கழித்து விராட் கோலி-ரோஹித் சா்மா பங்கேற்காத டி20 தொடராக இது அமைகிறது. அதே போல் மூத்த பௌலா்கள் பும்ரா, ஷமியும் இடம் பெறவில்லை. மணிக்கு 150 கிமீ. வேகத்தில் பந்துவீசும் காஷ்மீா் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக், இடதுகை பௌலா் அா்ஷ்தீப் சிங் இடம் புதுமுகங்களாக இடம் பெற்றுள்ளனா்.

டெத் ஓவா் பினிஷராக தினேஷ் காா்த்திக்கும் பல ஆண்டுகள் கழித்து டி20 அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். தொடக்க பேட்டிங் வரிசையில் மட்டுமே குழப்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட அட்டவணை:

முதல் டி20, ஜூன் 9-தில்லி, இரண்டாம் டி20, ஜூன் 12-கட்டாக், மூன்றாம் டி20, ஜூன் 14-விசாகப்பட்டினம், நான்காம் டி20, ஜூன் 17-ராஜ்கோட், ஐந்தாம் டி20, ஜூன் 19-பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com