டி20 கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்.
டி20 கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர்


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். 3 வருடங்களுக்குப் பிறகு 1066 நாள்கள் கழித்து அவர் இந்திய அணியில் மீண்டும் விளையாடினார். அதற்கு முன்பு 2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் விளையாடினார். பிறகு நேற்றுதான் இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்கு மீண்டும் அவர் தேர்வாகியுள்ளார்.

இந்திய அணி டிசம்பர் 1, 2008-ல் முதல் டி20 ஆட்டத்தில் விளையாடியது. அந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்திய அணியில் நேற்று மீண்டும் விளையாடியதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் லாலா அமர்நாத், 1948-ல் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர். அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் - திலீப் வெங்சர்கார். இந்த வரிசையில் டி20 கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் ஆகியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

இதுவரை 33 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள 37 வயது தினேஷ் கார்த்திக், 400 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 142.85. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com