பரிசுத்தொகையை உயர்த்திய விம்பிள்டன்

பரிசுத்தொகையை உயர்த்திய விம்பிள்டன்

2022 விம்பிள்டன் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 392 கோடி (40.35 மில்லியன் பவுண்டுகள்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 விம்பிள்டன் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 392 கோடி (40.35 மில்லியன் பவுண்டுகள்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் 2022 போட்டி ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டிக்குத் தரவரிசைப் புள்ளிகளை வழங்க முடியாது என ஏடிபி, டபிள்யூடிஏ ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த வருடப் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 392 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடத்திலிருந்து 11.1% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டியை வெல்லும் வீரர், வீராங்கனைக்குத் தலா ரூ. 19.42 கோடி பரிசுத்தொகை (2 மில்லியன்) வழங்கப்படவுள்ளது. 2019-ல் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் ஆன வீரருக்கு ரூ. 22.83 கோடி (2.35 மில்லியன்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பரிசுத்தொகை குறைக்கப்பட்டாலும் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் பரிசுத்தொகையை விம்பிள்டன் நிர்வாகம் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com