டி20 புள்ளிவிவரங்கள்: அதிகமான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவும் முதல்முறையாக சறுக்கிய இந்தியாவும்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 10 ஓவர்களில் வெற்றிகரமாக விரட்டிய ரன்கள்...
டி20 புள்ளிவிவரங்கள்: அதிகமான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவும் முதல்முறையாக சறுக்கிய இந்தியாவும்
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 76 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும் பாண்டியா 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 11-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்க அணி. ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் மில்லரும் வாண் டர் டுசெனும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்கள். டுசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் மில்லர் 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாக மில்லர் தேர்வானார்.

இந்த ஆட்டத்தின் முக்கியமான புள்ளிவிவரங்கள்

* தொடர்ச்சியான 12 வெற்றிகளுடன் உலக சாதனையைச் சமன் செய்த இந்திய அணி, தில்லியில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தால் 13 வெற்றிகளுடன் புதிய உலக சாதனை படைத்திருக்கும். ஆனால் மில்லர் - டுசென் அதிரடியால் அந்தக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. 

* டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணி, அதிகமான இலக்கை (212 ரன்கள்) விரட்டியுள்ளது. இதற்கு முன்பு 2007 டி20 உலகக் கோப்பையில் மே.இ. தீவுகளுக்கு எதிராக 206 ரன்களை விரட்டியதே அதிகமாக இருந்தது. 

* 2019 ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு இந்திய அணியின் டி20 தொடர்களில்...

இலக்கை விரட்டுவது: வெற்றி 17, தோல்வி 1
2-வதாகப் பந்துவீசியபோது: வெற்றி 14, தோல்வி 13 (இரு ஆட்டங்கள் டை-யில் முடிந்தன.)

* சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 10 ஓவர்களில் வெற்றிகரமாக விரட்டிய ரன்கள்

2022-ல் இந்தியாவுக்கு எதிராக தெ.ஆ.: 126 ரன்கள்
2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா: 125 ரன்கள்
2019-ல் மே.இ. தீவுகளுக்கு எதிராக இந்தியா: 119 ரன்கள்

டி20: ஆட்ட நாயகன் விருதை அதிகமுறை வென்ற தெ.ஆ. வீரர்கள்

டேவிட் மில்லர் - 8
டி வில்லியர்ஸ் - 7
டுமினி - 5

இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களுக்குக் கூட்டணி அமைத்த வீரர்கள் 

மில்லர் -  வான் டர் டுசென்: 131* ரன்கள் (2022)
பட்லர் - மலான்: 130 ரன்கள் (2021)

* டி20யில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு அதிகமாக எடுத்தும் தோல்வியடைந்தது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் எடுத்த 11 முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2015-ல் இந்தியா நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியதும் தென்னாப்பிரிக்க அணி தான். 

* டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 200+ ரன்களை எடுத்த நாடுகள்

இந்தியா - 20
தென்னாப்பிரிக்கா - 15
ஆஸ்திரேலியா - 14

* நேற்றைய ஆட்டத்தில் 75.76% ரன்கள் பவுண்டரிகளின் வழியாக (4, 6) கிடைத்தன. 

* நேற்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களின் எகானமி - 12.17. மஹாராஜ், ஷம்சி, சஹால், அக்‌ஷர் படேல் ஆகிய நால்வரும் சேர்ந்து 11.1 ஓவர்களை வீசினார்கள். 2 விக்கெட்டுகள் எடுத்து 136 ரன்கள் கொடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.