முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான் (விடியோ)

2-வது ஒருநாள் ஆட்டத்தை 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி.

News image
Updated On :11 ஜூன் 2022, 5:39 am

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி.

முல்தானில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 72 ரன்களும் கேப்டன் பாபர் ஆஸம் 77 ரன்களும் எடுத்தார்கள். அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 32.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புரூக்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.