வரலாற்றில் இன்று: இந்தியா பெற்ற முதல் ஒருநாள் வெற்றி

கடந்த 1975ஆம் ஆண்டு இந்த நாளில்  இந்திய கிடிக்கெட் அணி முதல் முறையாக தனது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றியினைப் பதிவு செய்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கடந்த 1975ஆம் ஆண்டு இந்த நாளில்  இந்திய கிடிக்கெட் அணி முதல் முறையாக தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றியினைப் பதிவு செய்தது.

முதல் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பிரிவு ’ஏ’-ல் இடம் பெற்றிருந்த கிழக்கு ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டி வெற்றியினைப் பெற்றது. இந்தப் போட்டி இங்கிலாந்தில் லீட்ஸ்-ல் நடைபெற்றது.

1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. தனது தொடக்க ஆட்டத்தில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மோசமான தோல்வியைப் பதிவு செய்த இந்திய அணி தனது அடுத்தப் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிழக்கு ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தங்களைவிட பலம் குறைந்த அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா வெறும் 120 ரன்களே எடுத்தன. ஜவஹிர் ஷா (37 ரன்கள்) மற்றும் ரமேஷ் சேத்தி (23 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்களால் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து ஆட முடியவில்லை. இந்திய அணியின் சார்பில் மதன் லால் 3 விக்கெட்டுகளையும், சயீது அபித் அலி மற்றும் மோஹிந்தர் அமர்நாத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 12 ஓவர்களை வீசிய பிஷான் சிங் பேடி வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டினை வீழ்த்தினார். அவர் 8 ஓவர்களில் எதிரணிக்கு ரன் கொடுக்காமல் வீசினார்.

இதனையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது அபாரத் திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய சுனில் கவாஸ்கர் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபரோக் 54 ரன்களும் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்த ஜோடி விக்கெட்டை பறிகொடுக்காமல் போட்டியை வென்றது. இதன்மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான விக்கெட் கீப்பிங் மற்றும் அசத்தலாக அரைசதம் அடித்த ஃப்ரோக் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

அன்று தனது முதல் வெற்றியை பிரம்மாண்டமாக பதிவு செய்த இந்திய அணி அதன் பின் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. இந்திய அணி இதுவரை மொத்தமாக 1,002 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 521 போட்டிகளில் வெற்றியும், 431 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 41 போட்டிகளில் எந்த ஒரு முடிவும் இல்லை. 9 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் 54.68 சதவிகிதம் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com