2021 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்து வரும் ஜோ ரூட்

2021 முதல் நம்பமுடியாத விதத்தில் டெஸ்ட் கிரிக்கெடில் ஏராளமான ரன்களைக் குவித்து வருகிறார் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்.
2021 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்து வரும் ஜோ ரூட்

2021 முதல் நம்பமுடியாத விதத்தில் டெஸ்ட் கிரிக்கெடில் ஏராளமான ரன்களைக் குவித்து வருகிறார் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ ரூட், 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து 2 இரட்டைச் சதங்கள், 4 150+ ரன்கள், 4 100+ ரன்கள் எனக் கடைசி 22 டெஸ்டுகளில் ஏராளமான ரன்களையும் சதங்களையும் அவர் எடுத்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை ரூட் சமீபத்தில் பூர்த்தி செய்தார் ரூட். 90களில் பிறந்த கிரிக்கெட் வீரர்களில் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்தார். 31 வயது ரூட், 2012 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த 14-வது வீரர். கடைசி 22 டெஸ்டுகளில் 10 சதங்களை எடுத்துள்ளார். 

கடந்த வருடம் ஆறு சதங்களுடன் 1708 ரன்கள் எடுத்தார் ரூட். ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரர் என்கிற பெருமையை அடைந்தார். இந்த வருடமும் அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகிறார். 

2021 முதல் டெஸ்டில் ஜோ ரூட்

228 vs இலங்கை 
186 vs இலங்கை 
218 vs இந்தியா
109 vs இந்தியா
180* vs இந்தியா
121 vs இந்தியா
109 vs மே. இ. தீவுகள் 
153 vs மே. இ. தீவுகள்
115* vs நியூசிலாந்து
176 vs நியூசிலாந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com