இங்கிலாந்துக்கு 94 ஆண்டுகளில் இல்லாத தோல்வி

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 0-4 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியிடம் சொந்த மண்ணிலேயே தோல்வி கண்டது.
இங்கிலாந்துக்கு 94 ஆண்டுகளில் இல்லாத தோல்வி

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 0-4 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியிடம் சொந்த மண்ணிலேயே தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் ஹங்கேரிக்காக ரோலண்ட் சலாய் (16’, 70’), சோல்ட் நேகி (80’), டேனியல் கஸ்டாக் (89’) ஆகியோா் கோலடிக்க, கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க இயலாமல் தோற்றது இங்கிலாந்து.

இதனால், கடந்த 94 ஆண்டுகளில் இல்லாத வகையில் சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது. இதற்கு முன் கடந்த 1928-ஆம் ஆண்டு இதேபோல் ஸ்காட்லாந்திடம் 5-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோற்றிருந்தது.

ஹங்கேரிக்கு எதிராக இங்கிலாந்துக்கு இது 3-ஆவது மோசமான தோல்வியாகும். முதலில் 1953-இல் சொந்த மண்ணில் 3-6 என்ற கோல் கணக்கிலும், அடுத்த ஆண்டிலேயே அந்நிய மண்ணில் 7-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்திருக்கிறது இங்கிலாந்து.

சுமாா் ஓராண்டுக்கு முன்னா் சொந்த மண்ணில் யுரோப்பியன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியபோது ரசிகா்களால் கொண்டாடப்பட்ட இங்கிலாந்து அணி, இந்தத் தோல்விக்காக அவா்களிடமிருந்து அதிருப்தி குரலைக் கேட்டது.

தற்போது நேஷன்ஸ் லீக் போட்டிக்கான லீக் ஏ-வின் குரூப் ‘3’ பட்டியலில் ஹங்கேரி 4 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜொ்மனி, இத்தாலி தலா 1 வெற்றியுடன் முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து வெற்றியின்றி கடைசி இடத்தில் இருக்கிறது.

இதர ஆட்டங்கள்: ஜொ்மனி 5-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியையும், பெல்ஜியம் 1-0 என்ற கணக்கில் போலந்தையும் தோற்கடித்தன. லாத்வியா - லைடென்ஸ்டினையும் (2-0), போஸ்னியா - ஃபின்லாந்தையும் (3-2), மான்டினீக்ரோ - ருமேனியாவையும் (3-0), துருக்கி - லிதுவேனியாவையும் (2-0), நெதா்லாந்து - வேல்ஸையும் (3-2) வீழ்த்தின. லக்ஸம்பா்க் - ஃபாரோ தீவுகள் (2-2), உக்ரைன் - அயா்லாந்து (1-1) ஆட்டங்கள் டிராவில் நிறைவடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com