ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற இந்திய அணி வீரர்கள் (படங்கள்)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.

News image
Updated On :20 ஜூன் 2022, 12:21 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.

இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் அடுத்ததாகச் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7 அன்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12 அன்றும் தொடங்குகின்றன. இதன்பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சிலர், இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். விராட் கோலி, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், பும்ரா, சிராஜ், புஜாரா, ஷமி, ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.