நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் சால்ட், மலான் ஆகிய இருவரும் சதமடித்துள்ளார்கள்.
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
ஜேசன் ராய் 1 ரன்னில் போல்ட் ஆனார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பில் சால்ட் - டேவிட் மலான் ஆகியோர் 2-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்தார்கள். பில் சால்ட் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மலான் 90 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. மலான் 111, பட்லர் 79 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.