10 வருடங்களாக இதுவே என் கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்
By DIN | Published On : 17th June 2022 04:47 PM | Last Updated : 17th June 2022 04:47 PM | அ+அ அ- |

ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் இந்திய அணிக்காக விளையாடுவதே என்னுடைய லட்சியமாக இருந்தது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அணியில் அருமையான சூழல் நிலவுகிறது. கடந்த மூன்று வருடங்களாக வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அணியில் விளையாடுவது எவ்வளவு சிறப்பானது என எண்ணுவேன். இப்போது அணியில் இடம்பிடித்து, இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்கிறேன்.
இந்திய அணியிலிருந்து பலமுறை நீக்கப்பட்டாலும் ஒவ்வொருமுறையும் அணிக்கு மீண்டும் திரும்பவே விரும்பினேன். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அந்த எண்ணம் தான் என்னை இயக்கியது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. கடந்த பத்து வருடங்களாக அந்தக் கனவுதான் என்னைத் தொடர்ந்து இயக்கி வந்தது என்றார்.