இந்திய அணிக்கு ஒரே வருடத்தில் 5 கேப்டன்கள்!

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தபோது டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும்...
பாண்டியா, ரிஷப் பந்த்
பாண்டியா, ரிஷப் பந்த்

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தபோது டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவரே கேப்டனாக இருந்தார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் அவர் இந்திய அணியின் கேப்டனாகத் தற்போது இல்லை. நிரந்தர கேப்டனாக இருப்பவர் ரோஹித் சர்மா.

எனினும் ரோஹித் சர்மா ஓய்வெடுக்கும் சமயங்களில் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய நிலைமை உருவாகி விடுகிறது.

இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐந்து கேப்டன்கள்!

தென்னாப்பிரிக்காவில் கடைசி டெஸ்டில் கோலி கேப்டனாக இருந்தார். அதன்பிறகு நடைபெற்ற ஒருநாள் தொடருக்கு கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார். ஜனவரி மாதமே இரு கேப்டன்கள்!

இதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார்.

தற்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் கே.எல். ராகுல். ஆனால் காயம் காரணமாக அவர் விலக், ரிஷப் பந்த் கேப்டன் ஆனார். தற்போது அயர்லாந்து டி20 தொடருக்கு ஐபிஎல் கோப்பையை வென்ற பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆக, இந்த வருடம் இதுவரை மட்டுமே 5 கேப்டன்கள்!

இதேபோல 1959-லும் இந்திய அணிக்கு 5 பேர் கேப்டனாக இருந்துள்ளார்கள். 9 ஆட்டங்களில் வினூ மன்கட், ஹேமு அதிகாரி, தத்தா கெயிக்வாட், பங்கஜ் ராய், குலாப்ராய் ராம்சந்த் ஆகியோர் கேப்டனாகப் பதவி வகித்தார்கள். 1958 நவம்பர் முதல் நடைபெற்ற 7 டெஸ்டுகளில் இந்திய அணியில் 6 பேர் கேப்டனாக இருந்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com