டெஸ்ட் தொடர்: முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேச அணி
By DIN | Published On : 17th June 2022 12:06 PM | Last Updated : 17th June 2022 12:06 PM | அ+அ அ- |

அல்ஸாரி ஜோசப் (கோப்புப் படம்)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கதேச அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள், 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
நார்த் சவுண்டில் தொடங்கிய முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 32.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. கேப்டன் சகிப் அல் ஹசன் மட்டும் நன்கு விளையாடி 51 ரன்கள் எடுத்தார். ஜேடன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
முதல் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிராத்வெயிட் 42, போனர் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...