கோப்புப் படம்
கோப்புப் படம்

ஹார்திக் பாண்டியா பவுலர்களின் கேப்டன் : யாஷ் தயாள்

குஜராத் டைட்டன்ஸின் வேகப்பந்து வீச்ச்சாளர் யாஷ் தயாள் ஹார்திக் பாண்டியா பவுலர்களின் கேப்டனாக செயல்படுவர் என கருத்துத் தெரிவித்து உள்ளார். 

குஜராத் டைட்டன்ஸின் வேகப்பந்து வீச்ச்சாளர் யாஷ் தயாள் ஹார்திக் பாண்டியா பவுலர்களின் கேப்டனாக செயல்படுவர் என கருத்துத் தெரிவித்து உள்ளார். 

கே எல் ராகுல்க்கு காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடருக்கு எதிராக விளியாட முடியாததால் அவருக்கு பதில் ரிஷப் பந்த் கேப்டனாக செயலபட்டு வருகிறார். அடுத்து ஹார்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் இந்தியா விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டர் பர்பாமென்ஸை கொடுத்தார் ஹார்திக் பாண்டியா. அவரது முதல்முறையாக கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்று எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

24வயதான யாஷ் தயாள் குஜராத் அணிகாக ஐபிஎல் 2022இல் விளையாடினார். 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்தார். 2021 விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடி லைம்லைட்டிற்கு வந்ததால் ஐபிஎல் போட்டியில் தேர்வானார். அவர் ஆங்கில சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஹார்திக் மிகவும் அமைதியான உறுதியான மனிதர். அவருக்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமென்பது தெரியும். அவர் பவுலர்களின் கேப்டன். நீங்கள் உறுதியானவராக இருந்தால் அவர் உங்களின் போக்கில் விட்டுவிடுவார். அது பவுலர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தரும். நான் விளையாடியதிலேயே அவர்தான் சிறந்த கேப்டனும் என்பேன். 

ஆரம்பத்தில் ஆஷிஷ் நெக்ரா எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் முதலில் அதிகமான விதியாசங்களை முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் நெக்ரா அவர்கள்தான் முக்கியமான் சில அடிப்படைகளை கற்றுத்தந்தார். நம்மை வருத்திக்கொள்ளாமல் அழுத்ததிற்க்கு ஆட்படாமல் ஒன்றில் கவனத்தை குவிக்க கற்றுத்தந்தார். கடும் போட்டிகள் நிறைந்த இவ்விளையாட்டில் விவேகமும் வேண்டும் என்பார். ஆரம்ப வீரர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் இறுதியில் எப்படி வீச வேண்டுமென வித்தியாசங்களை கற்றுத் தந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com