ரிஷப் பந்த் இந்த ஷாட்டை விளையாடக் கூடாது: கவாஸ்கர் அறிவுரை

டி20 ஆட்டங்களில் தடுமாறும் ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் சில அறிவுரைகளைக் கூறியுள்ளார்.
ரிஷப் பந்த் இந்த ஷாட்டை விளையாடக் கூடாது: கவாஸ்கர் அறிவுரை

டி20 ஆட்டங்களில் தடுமாறும் ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் சில அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 29, 5, 6, 17 என குறைவான ரன்களே எடுத்துள்ளார் இந்திய அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த். இதுவரை 47 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள பந்த், 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 123.95. இந்தத் தொடரில் வைட் ஆஃப் ஸ்டம்ப் பக்கம் பந்துவீசும்போது அதை அடித்தாட முயன்று ஆட்டமிழந்துள்ளார். நான்கு முறையும் இதேபோல ஆட்டமிழந்த ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுநீல் கவாஸ்கர் சில அறிவுரைகளை வர்ணனையின்போது கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

ரிஷப் பந்த் தனது தவறுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. வைடாகப் பந்து வீசினால் ஒவ்வொரு முறையும் அதை அடித்தாட முயல்கிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினால் சிக்ஸர் அடிக்க முயலும் ஷாட்டை அவர் விளையாடக் கூடாது. அந்த ஷாட்டால் அவர் நினைத்தபடி ரன்கள் எடுக்க வழியில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினால் ஆட்டமிழந்து விடுவார் எனச் சரியாகத் திட்டமிட்டுத்தான் பந்துவீசுகிறார்கள். இந்த வருடம் இதுபோல 10 முறை ஆட்டமிழந்துள்ளார். ரிஷப் பந்த் அந்த ஷாட்டை முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் சில பந்துகள் வைட் ஆகியிருக்கும். இந்திய அணியின் கேப்டனாக இருந்து, ஒரே தொடரில் ஒரே மாதிரியான ஷாட்டில் தொடர்ந்து ஆட்டமிழப்பது நல்லதல்ல என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com