கோபமடைந்த மூத்த வீரர்: சர்ச்சையுடன் தொடங்கிய டிஎன்பிஎல் டி20 போட்டி (விடியோ)

இதனை எதிர்பாராத ஜெகதீசன், கோபத்துடன் ஓய்வறைக்குத் திரும்பினார்.
கோபமடைந்த மூத்த வீரர்: சர்ச்சையுடன் தொடங்கிய டிஎன்பிஎல் டி20 போட்டி (விடியோ)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக் போட்டி முதல் நாளிலேயே சர்ச்சையுடன் தொடங்கியுள்ளது.

6-வது டிஎன்பிஎல் போட்டி திருநெல்வேலியில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கிடையே முதல் ஆட்டம் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டம் டை ஆகி பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வென்றது. சென்னை வெற்றி பெற 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவை என்கிற நிலையில் எஸ்.ஹரிஷ் குமார் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை டை செய்தார். சூப்பர் ஓவரில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. 0.5 ஓவரில் 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது நெல்லை அணி. 

தமிழக அணியின் மூத்த வீரரும் சென்னை அணியைச் சேர்ந்தவருமான ஜெகதீசனை 25 ரன்களில் பந்துவீச்சாளர் முனையில் (மன்கட் முறையில்) ரன் அவுட் செய்தார் பந்துவீச்சாளர் பாபா அபரஜித். நடுவரும் உடனடியாக முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவுட் கொடுத்தார். இதனை எதிர்பாராத ஜெகதீசன், கோபத்துடன் ஓய்வறைக்குத் திரும்பினார். இதனால் ஆட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்ததால் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டார் தமிழக வீரர் அஸ்வின். தற்போது டிஎன்பில் போட்டியிலும் முதல்நாளிலேயே அதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com