பிரபல இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்துத் தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்துத் தொடர்களிலிருந்து அடில் ரஷித் விலகியுள்ளார். காரணம் ஹஜ் பயணம்.
இஸ்லாமியர்களின் புனிதத் தலம் மெக்கா. சவுதி அரேபியாவில் உள்ளது. வசதியும் வாய்ப்பும் இருந்தால் வாழ்வில் ஒரு முறையேனும் மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள இஸ்லாமியர்கள் விரும்புவார்கள். இதனை ஹஜ் பயணம் என்பார்கள்.
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் புனித யாத்திரை நடைபெறவில்லை. இந்த வருடம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார் அடில் ரஷித். அவர் மெக்கா செல்ல இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஜூலை 7-ல் தொடங்கி 17-ல் முடியும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்துத் தொடர்களில் அடில் ரஷித் பங்கேற்க மாட்டார்.
அடில் ரஷித் விலகியுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் 25 வயது லெக் ஸ்பின்னர் மேட் பார்கின்சன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

1,000 முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசன் படத்தை உருவாக்கி அஞ்சலி

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கும் வரை பாசன சங்கங்கள் நீரேற்றம் செய்யக்கூடாது: நீா்வளத் துறை கூட்டத்தில் தகவல்

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



