இங்கிலாந்தை சரிவிலிருந்து எத்தனை முறை தான் காப்பாற்றுவாய் பேர்ஸ்டோ?

இங்கிலாந்து அணி சமீபகாலமாக டெஸ்டுகளில் நன்றாக விளையாடி வருவதற்கு...
இங்கிலாந்தை சரிவிலிருந்து எத்தனை முறை தான் காப்பாற்றுவாய் பேர்ஸ்டோ?

டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி தடுமாறுவது புதிதல்ல. இப்போது சரிவிலிருந்து மீட்க ஒரு வீரர் இங்கிலாந்து அணி வசமாகக் கிடைத்துவிட்டார். 

முதல் இரு டெஸ்டுகளை வென்று தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில் 3-வது டெஸ்ட் லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முதல் 6 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, ஓவர்டன் பிரமாதமாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்கள். பவுண்டரிகளாக அடித்துத் தள்ளி விரைவாக ரன்கள் எடுத்த பேர்ஸ்டோ, 95 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். இன்று தொடர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ, 144 பந்துகளில் 23 பவுண்டரிகளுடன் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

இந்த வருடம் டெஸ்டில் பேர்ஸ்டோவின் நான்கு சதங்களுமே தனது அணியைக் காப்பாற்ற போராடியபோது எடுத்ததுதான். இவரைப் போன்ற ஒரு வலுவான நடுவரிசை வீரர் தான் ஒவ்வொரு அணிக்கும் தேவை. கடைசியாக அடித்த மூன்று சதங்களாலும் இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து தப்பித்தது. இரு டெஸ்டுகள் டிரா ஆகின. கடந்த டெஸ்டை இங்கிலாந்து வென்றது. இந்த முறையும் பேர்ஸ்டோவால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.

ஒவ்வொருமுறையும் பேர்ஸ்டோ வந்து காப்பாற்றுவது சரியல்ல, இதர பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடி பேர்ஸ்டோவின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து அணி சமீபகாலமாக டெஸ்டுகளில் நன்றாக விளையாடி வருவதற்குப் புதிய கேப்டனும் புதிய பயிற்சியாளரும் மட்டும் காரணமல்ல, பேர்ஸ்டோவின் அற்புதமான பேட்டிங்கும் இங்கிலாந்துக்குப் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கின்றன.

அணியைக் காப்பாற்றும் பேர்ஸ்டோ

இங்கிலாந்து 4/36, சதமடித்தார் பேர்ஸ்டோ vs ஆஸ்திரேலியா (டிரா)
இங்கிலாந்து 4/48, சதமடித்தார் பேர்ஸ்டோ vs மே.இ. தீவுகள் (டிரா)
இங்கிலாந்து 3/56, சதமடித்தார் பேர்ஸ்டோ vs நியூசிலாந்து (இங்கிலாந்து வெற்றி)
இங்கிலாந்து 6/55, சதமடித்தார் பேர்ஸ்டோ vs நியூசிலாந்து (ஆட்டம் நடைபெற்று வருகிறது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com