நியூசிலாந்தில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்தியா: அட்டவணை வெளியீடு
By DIN | Published On : 28th June 2022 11:11 AM | Last Updated : 28th June 2022 11:11 AM | அ+அ அ- |

இந்திய அணி இந்த வருட நவம்பர் மாதம் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்று அக்டோபர் 22 முதல் தொடங்குகிறது. நவம்பர் 13 அன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்ற பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இந்திய அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. டி20 தொடர் நவம்பர் 18 முதல் தொடங்குகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் 25 முதல் தொடங்குகிறது. டி20 ஆட்டங்கள் வெல்லிங்டன், தாரங்கா, நேபியர் ஆகிய நகரங்களிலும் ஒருநாள் தொடர் ஆக்லாந்து, ஹேமில்டன், கிறைஸ்ட்சர்க் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.
இந்திய அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணம்
முதல் டி20: நவம்பர் 18
2-வது டி20: நவம்பர் 20
3-வது டி20: நவம்பர் 22
முதல் ஒருநாள்: நவம்பர் 25
2-வது ஒருநாள்: நவம்பர் 27
3-வது ஒருநாள்: நவம்பர் 30