அறுவைச் சிகிச்சை முடிந்தது: கே.எல். ராகுல் தகவல்

ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கே.எல். ராகுல்.
அறுவைச் சிகிச்சை முடிந்தது: கே.எல். ராகுல் தகவல்

ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பிரபல இந்திய வீரர் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் 5-வது டெஸ்டிலும் அவரால் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கே.எல். ராகுல். ஜெர்மனியின் மியூனிக்கில் இருந்து அவர் கூறியதாவது:

கடந்த சில வாரங்கள் கடினமானதாக இருந்தன. ஆனால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. காயம் குணமாகி வருகிறது. காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான பயணம் தொடங்கி விட்டது. அனைவருடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com