கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது ஃபிஃபா அமைப்பு.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது ஃபிஃபா அமைப்பு.

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

உக்ரைன் மீது ரஷியா கடந்த வாரம் தாக்குதலைத் தொடங்கியது. ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள், போா் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் ரஷிய தரைப் படையும் உக்ரைனுக்குள் ஊடுருவியது. இதுவரையிலான ஐந்து நாள் சண்டையில் உக்ரைனில் பொதுமக்கள் 102 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில் உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளது ஃபிஃபா. 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது. மேலும் சர்வதேசப் போட்டிகளில் ரஷிய அணி பங்கேற்கவும் ஃபிஃபா மற்றும் ஐரோப்பியக் கால்பந்து அமைப்பான யூஈஎஃப்ஏ ஆகிய இரு அமைப்புகளும் தடை விதித்துள்ளன.

இம்மாதம் உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியின் அரையிறுதியில் போலந்துக்கு எதிராக ரஷிய அணி விளையாடவிருந்தது. ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரஷிய மகளிர் அணி ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. ஃபிஃபாவின் இம்முடிவால் ரஷிய அணியால் இரு போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும் ஐரோப்பியப் போட்டிகளில் ரஷியக் கால்பந்து கிளப்புகளாலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com