மே.இ. தீவுகளுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து: அரையிறுதிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா

இதர அணிகளின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
தெ.ஆ. வீராங்கனை லாரா (கோப்புப் படம்)
தெ.ஆ. வீராங்கனை லாரா (கோப்புப் படம்)

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து தெ.ஆ. அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தெ.ஆ. அணி 10.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மே.இ. தீவுகள் அணி 7 ஆட்டங்களில் 7 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இதர அணிகளின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். இங்கிலாந்து அணி அடுத்து விளையாடும் இரு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலோ அல்லது இந்திய அணி மீதமுள்ள ஓர் ஆட்டத்திலும் தோல்வியடைந்தாலோ மே.இ. தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com