மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஷேன் வார்ன் நினைவஞ்சலிக் கூட்டம் (படங்கள்)

சச்சின் டெண்டுல்கர், மார்க் டெய்லர், ஆலன் பார்டர், நாசிர் ஹுசைன், பிரையன் லாரா போன்ற பிரபல வீரர்களும்...
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஷேன் வார்ன் நினைவஞ்சலிக் கூட்டம் (படங்கள்)
Published on
Updated on
3 min read

சமீபத்தில் மறைந்த ஷேன் வார்னின் நினைவஞ்சலிக் கூட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. 

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டுகளில் விளையாடிய 708 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் ஷேன் வார்ன். நண்பர்களுடன் தாய்லாந்து சென்ற வார்ன், எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு மார்ச் 4 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து வார்னின் உடல், ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. வார்னின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைச் செய்தது. கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் வார்னே குறித்த தங்கள் நினைவுகளைச் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார்கள். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் ஷேன் வார்னுக்கு மெல்போர்ன் மைதானத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். வார்னின் குழந்தைகள் புரூக், ஜாக்சன், சம்மர் உள்ளிட்ட குடும்பத்தினரும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் இரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள். இசை நிகழ்ச்சிகள், காணொளிப் புகழுரைகளும் இடம்பெற்றன. 

மெல்போர்ன் மைதானத்தில் தான் தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வார்ன் எடுத்தார். மேலும் இங்குதான் இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார். 

பாடகர்கள் ஜான் ஸ்டீவன்ஸ், கிறிஸ் மார்டின் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர், மார்க் டெய்லர், ஆலன் பார்டர், நாசிர் ஹுசைன், பிரையன் லாரா போன்ற பிரபல வீரர்களும் வார்ன் குறித்த தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். 

மெல்போர்ன் மைதானத்தில் உள்ள கிராண்ட் சதர்ன் ஸ்டாண்ட், ஷேன் வார்ன் ஸ்டாண்ட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நினைவஞ்சலிக் கூட்டத்தின் இறுதியில் புரூக், ஜாக்சன், சம்மர் ஆகிய மூவரும் ஷேன் வார்ன் ஸ்டாண்டைத் திறந்து வைத்தார்கள். 

நினைவஞ்சலிக் கூட்டத்தின் புகைப்படங்கள்:

மெல்போர்ன் மைதானத்தில் ஷேன் வார்ன் ஸ்டாண்ட்
மெல்போர்ன் மைதானத்தில் ஷேன் வார்ன் ஸ்டாண்ட்
Caption
Caption
வார்ன் மகள் புரூக்
வார்ன் மகள் புரூக்
வார்ன் மகன் ஜாக்சன்
வார்ன் மகன் ஜாக்சன்
வார்ன் மகள் சம்மர்
வார்ன் மகள் சம்மர்
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன்
 
ஷேன் வார்னின் தந்தை கீத் வார்ன்
ஷேன் வார்னின் தந்தை கீத் வார்ன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com