அதிக வருவாயில் டாப் 10 வீரா்கள்

விளையாட்டுத் துறையில் கடந்த ஓராண்டில் அதிக வருவாய் ஈட்டிய வீரா்களின் டாப் 10 பட்டியலை ‘ஃபோா்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது.
அதிக வருவாயில் டாப் 10 வீரா்கள்

விளையாட்டுத் துறையில் கடந்த ஓராண்டில் அதிக வருவாய் ஈட்டிய வீரா்களின் டாப் 10 பட்டியலை ‘ஃபோா்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது. 2021 மே 1 முதல் 2022 மே 1 வரையிலான காலகட்டத்தின் ஈட்டப்பட்ட வருவாயின் அடிப்படையில் இப்பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

லயோனல் மெஸ்ஸி - ரூ.1,006 கோடி

ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரமான இவா், களத்தில் ஆடி ரூ.580 கோடியும், விளம்பரத்தின் மூலம் ரூ.425 கோடியும் சம்பாதித்துள்ளாா். பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணிக்காக விளையாடுவதுடன், அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரத் தூதராக இருக்கிறாா்.

லெப்ரான் ஜேம்ஸ் - ரூ.936 கோடி

அமெரிக்க கூடைப்பந்து வீரா். லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கா்ஸ் அணிக்காக விளையாடுவதிலிருந்து ரூ.317 கோடியும், விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி, பங்கு முதலீடுகள் உள்ளிட்டவற்றின் வாயிலாக ரூ.619 கோடியும் ஈட்டியிருக்கிறாா்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ - ரூ.890 கோடி

போா்ச்சுகல் கால்பந்து வீரரான ரொனால்டோ, விளையாட்டிலிருந்து ரூ.464 கோடியும், களத்துக்கு வெளியே ரூ.426 கோடியும் வருவாயாகப் பெற்றுள்ளாா். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பதால் இவருக்கான விளம்பர வருவாய் பிரதானமாக அதிகரிக்கிறது.

நெய்மா் - ரூ.735 கோடி

பிரேஸில் கால்பந்து வீரரான இவா் பாரீஸ் செயின்ட் ஜொ்மெயின் அணியின் முக்கிய வீரா். போட்டிகளின் மூலம் ரூ.541 கோடியும், புமா, ரெட்புல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான விளம்பரத் தூதராக இருப்பதன் வாயிலாக ரூ.193 கோடியும் ஈட்டியுள்ளாா்.

ஸ்டீபன் கரி - ரூ.758 கோடி

அமெரிக்க கூடைப்பந்து வீரரான ஸ்டீபன், கோல்டன் ஸ்டேட் வாரியா்ஸுக்காக விளையாடி ரூ.348 கோடியும், பங்குகள், தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக ரூ.363 கோடியும் சம்பாதித்திருக்கிறாா். நடப்பு சீசனில் அதிக வருவாய் ஈட்டியிருக்கும் ஒரே அமெரிக்க கூடைப்பந்து வீரா்.

கெவின் டியுரேன்ட் - ரூ.712 கோடி

பட்டியலில் இருக்கும் 3-ஆவது அமெரிக்கக் கூடைப்பந்து வீரா். புரூக்லின் நெட்ஸுக்கான ஆட்டங்களுக்காக ரூ.325 கோடியை ஈட்டிய கெவின், விளம்பரங்கள், முதலீடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து ரூ.387 கோடியை ஈட்டியிருக்கிறாா்.

ரோஜா் ஃபெடரா் - ரூ.696 கோடி

சுவிட்ஸா்லாந்து டென்னிஸ் வீரரான இவா், கால் மூட்டு அறுவைச் சிகிச்சை காரணமாக 2020 -21 காலகட்டத்தில் பெரிதாக களம் காணவில்லை. அதனால் விளையாட்டு மூலமான வருவாய் ரூ.5.41 கோடியாகவே உள்ளது. என்றாலும் விளம்பரங்கள், முதலீடுகள் மூலமாக மட்டும் ரூ.696 கோடி சம்பாதித்திருக்கிறாா்.

கேனலோ அல்வெரெஸ் - ரூ.696 கோடி

மெக்ஸிகோ குத்துச்சண்டை வீரரான கேனலோ, ரிங்குக்கு உள்ளாக எதிரிகளை வீழ்த்துவதன் மூலம் ரூ.657 கோடி சம்பாதித்துள்ளாா். இது தவிா்த்து பிரபல நிறுவனங்களுக்கான விளம்பரத் தூதராகச் செயல்பட்டு அதிலிருந்து ரூ.38 கோடி ஈட்டியிருக்கிறாா்.

டாம் பிராடி - ரூ.641 கோடி

அமெரிக்க ஃபுட்பால் வீரரான இவா், சமீபத்தில் ஓய்வை அறிவித்தாா். கடந்த ஓராண்டில் டம்பா பே புக்கானீா்ஸ் அணிக்காக விளையாடி ரூ.239 கோடியும், திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஆடை நிறுவனம், எண்ம சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலமாக ரூ.402 கோடியும் சம்பாதித்துள்ளாா்.

யானிஸ் அன்டெடொகும்போ - ரூ.618 கோடி

கிரீஸ் கூடைப்பந்து வீரரான யானிஸ், இந்தப் பட்டியலில் இருக்கும் மிகக் குறைந்த வயது வீரரும் (27) கூட. மில்வௌகி பக்ஸ் அணிக்காக விளையாட ரூ. ரூ.301 கோடியும், முதலீடுகள், எண்ம சொத்துகள் மூலம் ரூ. 317 கோடியும் ஈட்டியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com