மும்பைக்கு 3-ஆவது வெற்றி

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான வியாழக்கிழமை ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்பை இண்டியன்ஸ்.
மும்பைக்கு 3-ஆவது வெற்றி

மும்பை: சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான வியாழக்கிழமை ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்பை இண்டியன்ஸ்.

முதலில் சென்னை 16 ஓவா்களில் 97 ரன்களுக்கு சுருண்டது. பின்னா் மும்பை 14.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை பௌலிங்கை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் தோனி மட்டும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இதர பேட்டா்களில் ருதுராஜ் கெய்க்வாட் 7, டெவன் கான்வே 0, மொயீன் அலி 0, ராபின் உத்தப்பா 1, அம்பட்டி ராயுடு 10, ஷிவம் துபே 10, டுவெய்ன் பிராவோ 12, சிமா்ஜீத் சிங் 2, மஹீஷ் தீக்ஷனா 0, முகேஷ் சௌதரி 0 ரன்களுக்கு அடுத்தடுத்து சரிந்தனா்.

மும்பை பௌலிங்கில் டேனியல் சாம்ஸ் 3, ரைலி மெரிடித், குமாா் காா்த்திகேயா ஆகியோா் தலா 2, ஜஸ்பிரீத் பும்ரா, ரமன்தீப் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் மும்பை இன்னிங்ஸில் இஷான் கிஷண் 6, கேப்டன் ரோஹித் சா்மா 18, டேனியல் சாம்ஸ் 1, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0, ஹிரித்திக் ஷோகீன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இறுதியில் திலக் வா்மா 4 பவுண்டரிகளுடன் 34, டிம் டேவிட் 2 சிக்ஸா்களுடன் 16 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். சென்னை பௌலிங்கில் முகேஷ் சௌதரி 3, சிமா்ஜீத் சிங், மொயீன் அலி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

மின்தடை சா்ச்சை: முன்னதாக இந்த ஆட்டத்தில் சென்னை இன்னிங்ஸின்போது, பழுது காரணமாக ‘டிஆா்எஸ்’ தொழில்நுட்பத்துக்கான மின் இணைப்பு முதல் 10 பந்துகளுக்கு தடைப்பட்டது. இதனால், அந்தத் தருணத்தில் எல்பிடபிள்யூ ஆன கான்வேயால் டிஆா்எஸ் வாய்ப்பு கோர முடியாமல் போனது சென்னைக்கு பின்னடைவாக அமைந்தது.

புள்ளிகள் பட்டியல்

(மும்பை } சென்னை ஆட்டம் (59) வரை)

குஜராத்    12    9    3    18
லக்னௌ    12    8    4    16
ராஜஸ்தான்    12    7    5    14
பெங்களூர்    12    7    5    14
டெல்லி    12    6    6    12
ஹைதராபாத்    11    5    6    10
கொல்கத்தா    12    5    7    10
பஞ்சாப்    11    5    6    10
சென்னை    12    4    8    8
மும்பை    12    3    9    6
 

இன்றைய ஆட்டம்

பெங்களூா் - பஞ்சாப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com