விராட் கோலி பிறந்த நாள்: புகழாரம் சூட்டிய தொடக்க ஆட்டக்காரர்
By DIN | Published On : 05th November 2022 08:07 PM | Last Updated : 05th November 2022 08:07 PM | அ+அ அ- |

விராட் கோலியின் ஒழுக்கம், நேர்மறையான எண்ணம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை போன்ற பண்புகள் அவரை தனித்துவமாக காட்டுகிறது என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று ( நவம்பர் 5) தனது 34வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன், விராட் கோலிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 55 குழந்தைகள் பலி: அதிகாரப்பூர்வ தகவல்
இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷிகர் தவான் இதனை தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் ஷிகர் தவான் பேசியதாவது: விராட் கோலி உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். விராட்டினுடைய தன்னம்பிக்கை மிகவும் உறுதியாக உள்ளது. அவருடைய எண்ணங்களும் மிகுந்த நேர்மறையான எண்ணங்களாக உள்ளன. அவருடன் பேசும்போது நம்முடன் நாமே பேசுவது போன்ற உணர்வு ஏற்படும்.
இதையும் படிக்க: வெளியானது வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் !
நீங்களே உங்களுடைய நண்பனும், எதிரியும். விராட் கோலி சிறந்த ஒழுக்கம் உடையவர். அவர் வேண்டுமென்பதை நன்றாக சாப்பிட்டு உடல் பருமனாக ஆகி விடுவார். பின்னர், அவருடைய மன வலிமையால் குறைந்த காலத்திலேயே உடல் எடையைக் குறைத்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஃபார்மில் இல்லாமல் இருப்பது போன்ற தருணங்கள் வரும். சரியாக விளையாடவில்லை என்றால் மன அழுத்தம் அதிகமாகும். இவை அனைத்துமே நமது பயணத்தின் ஒரு பகுதியே தவிர முடிவு இல்லை. ஒருவர் தனது பயணம் குறித்து தெரிந்து கொண்டால் அது இன்னும் பல அழகான விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் என்றார்.
இதையும் படிக்க: கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: 205 யானைகள் பலியானதாக தகவல்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அதிரடியான ஆட்டத்திற்கு (ஃபார்குக்கு) திரும்பியுள்ள விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். நீண்ட நாட்களாக விராட் கோலி சரியாக விளையாடுவதில்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 220 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.