வேதனையும் பெருமையும்: டி20 உலகக் கோப்பை தோல்வி பற்றி விராட் கோலி

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல வீரர் விராட் கோலி.
வேதனையும் பெருமையும்: டி20 உலகக் கோப்பை தோல்வி பற்றி விராட் கோலி

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல வீரர் விராட் கோலி.

அடிலெய்டில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியா 63, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஞாயிறன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ட்விட்டரில் விராட் கோலி கூறியதாவது:

எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம். எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது. ஆனால் ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். மைதானத்துக்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com