2024-2027 வரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் பட்டியல் வெளியீடு!
By DIN | Published On : 13th November 2022 06:19 PM | Last Updated : 13th November 2022 06:19 PM | அ+அ அ- |

2024-2027 ஆம் ஆண்டு வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா மற்றும் வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 2024-2027 வரை ஐசிசி யு19 போட்டிகளை நடத்தும் நாடுகளாக அங்கீகரித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2026 இல் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில நடைபெறுகிறது.
இதையும் படிக்க | டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்ஸ்!
2025 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெறுகிறது, மேலும், 2027 ஆம் ஆண்டு மகளிர் போட்டியை வங்கதேசம் மற்றும் நேபாளம் இணைந்து நடத்துகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.
மார்ட்டின் ஸ்னோடன் தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துணைக் குழுவால் மேற்பார்வையிடப்பட்ட போட்டி ஏல செயல்முறை மூலம் ஹோஸ்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐசிசி நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொரு ஏலத்தையும் முழுமையாக ஆய்வு செய்த குழுவின் பரிந்துரைகளை ஐசிசி வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.