
ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து பிரபல வீரர் சாம் பில்லிங்ஸ் விலகியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 31 வயது விக்கெட் கீப்பர் - பேட்டரான சாம் பில்லிங்ஸ், கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணிக்குத் தேர்வானார். 8 ஆட்டங்களில் விளையாடி 169 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 122.46. கொல்கத்தா அணி 7-ம் இடம் பிடித்தது. இதற்கு முன்பு சிஎஸ்கே அணியிலும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகுவதாக சாம் பில்லிங்ஸ் அறிவித்துள்ளார். கெண்ட் அணியில் பங்கேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.