ஐபிஎல்: அணி மாறினார் ஷர்துல் தாக்குர்!

சிஎஸ்கே, குஜராத், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் ஷர்துல் தாக்குரைத் தேர்வு செய்ய விருப்பப்பட்டாலும்...
ஐபிஎல்: அணி மாறினார் ஷர்துல் தாக்குர்!

பிரபல வீரர் ஷர்துல் தாக்குரை தில்லி அணியிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

31 வயது ஷர்துல் தாக்குர், இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள், 27 ஒருநாள், 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 10.75 கோடிக்கு ஷர்துல் தாக்குரைத் தேர்வு செய்தது தில்லி கேபிடல்ஸ் அணி. ஐபிஎல் 2022 போட்டியில் 14 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை எடுத்தார் தாக்குர். எகானமி - 9.79. பேட்டிங்கில் 120 ரன்கள் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஷர்துல் தாக்குர் இந்த வருடம் வேறு அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டிசம்பர் 23-ல் ஐபிஎல் ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் நாளையுடன் தாங்கள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.  குஜராத் அணியிடமிருந்து ஃபெர்குசன், குர்பாஸ் ஆகிய இருவரையும் ஏற்கெனவே தேர்வு செய்துள்ள கொல்கத்தா அணி 3-வதாக ஷர்துல் தாக்குரையும் தேர்வு செய்துள்ளது. ஷர்துல் தாக்குரை தில்லி அணியிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளது. சிஎஸ்கே, குஜராத், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் ஷர்துல் தாக்குரைத் தேர்வு செய்ய விருப்பப்பட்டாலும் இறுதியில் கொல்கத்தா அணிக்கு அவர் தேர்வாகியுள்ளார். 

ஐபிஎல் 2022 போட்டியில் 6 வெற்றிகள், 8 தோல்விகளுடன் 7-ம் இடத்தைப் பிடித்தது கொல்கத்தா அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com