வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! அமைச்சர் கோவி. செழியன் நலம் விசாரிப்பு!

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் குறித்து...

News image

மருத்துவமனையில் நலம் விசாரித்த அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்டோர். - படம்: DNS

Updated On :9 ஏப்ரல் 2026, 10:59 am

தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை, அமைச்சர் கோவி. செழியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், ஆடுதுறை அருகே இன்று(ஏப். 9) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வெய்யிலின் தாக்கம் அதிகமானதால் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது பிரசார வாகனத்தில் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் மயங்கி கீழே விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் அவரை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Minister Govi. Chezhiyan personally met AIADMK candidate Ilamathi Subramanian who had collapsed during the election campaign and inquired about her well-being.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.